Narendra Modi, Narendra Modi Video, Narendra Modi In Hindi, Narendra Modi Speech, Narendra Modi Height, Narendra Modi App, Narendra Modi Birthday, Narendra Modi Email Id, Pankaj Modi
அமெரிக்க நாட்டில் தங்கி வேலை செய்வதற்காக வெளிநாட்டினருக்கு அந்த நாடு ‘எச்-1 பி விசா’ வழங்கி வருகிறது. இந்த விசாக்கள் இந்தியா மட்டுமல்லாது உலக நாடுகளில் பலவற்றிலும் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக ஐ.டி. என்றழைக்கப்படுகிற தகவல் தொழில் நுட்பத்துறையில் பணியாற்றுகிறவர்கள் மத்தியில் இந்த விசாவுக்கு தனி மவுசு உள்ளது.
இந்த நிலையில், எச்1பி விசா நடைமுறையில் கடுமையான கட்டுப்பாடுகளை விதிப்பதற்கான நடவடிக்கைகளை அந்நாட்டு அரசு மேற்கொண்டு வரும் நிலையில், பிரதமர் மோடி திறன்வாய்ந்த ஊழியர்களை பணியமர்த்தும் விவகாரத்தில் தொலைநோக்குப் பார்வையுடன் அமெரிக்கா செயல்பட வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். இந்தியாவுக்கு அரசுமுறைப் பயணமாக வந்துள்ள அமெரிக்க நாடாளுமன்ற எம்.பி.க்களிடம் பிரதமர் மோடி இவ்வாறு கூறியுள்ளார்.
மேலும்,  அமெரிக்க எம்.பி.க்களிடம் இரு நாடுகளுக்கும் இடையேயான நல்லுறவை மேம்படுத்துவது குறித்தும், ஒருங்கிணைந்து செயல்படுவது குறித்தும்  பிரதமர் மோடி ஆலோசித்தார். இந்த தகவல் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.