NASA, NASA competition, NASA 3d space competition, nasa 3d competition, nasa 3d competition results, nasa news, space news, science news, world news

அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு கழகம் நாசா இன்று புதிய அறிவிப்பை வெளியிடவுள்ளதால் உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

நாட்டுக்கே அச்சுறுத்தலாக உள்ளார் ஹபீஸ் சயீது: பாகிஸ்தான்

முக்கிய அறிவிப்பை வெளியிட செய்தியாளர்கள் சந்திப்புக்கு நாசா அழைப்பு விடுத்துள்ளதையடுத்து உலகம் முழுவதும் உள்ள  வானவியல் ஆர்வளர்கள் மத்தியில் இதுகுறித்த பேச்சும், விவாதமும் அதிகரித்துள்ளது. இணையதளங்களில் இதுகுறித்த பகிர்வுகள் முக்கிய இடம் பிடித்துள்ளன.

இன்று அமெரிக்க நேரப்படி பிற்பகலில் செய்தியாளர்கள் சந்திப்புக்கு நாசா ஏற்பாடு செய்துள்ளது. இதுகுறித்த தகவல் reddit இணையதளத்தில் வெளியிடப்பட்டதும் நாசாவின் கண்டுபிடிப்பு புதிய கோள்களா? அல்லது, புதிய நட்சத்திரம் குறித்தா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

புதிய சூரியனை நாசா கண்டுபிடித்திருப்பதாகவும் தகவல் பரவி வருகிறது. பல்வேறு யூகங்கள் வலம் வந்தாலும் விடை காண செய்தியாளர்கள் சந்திப்பு வரை காத்திருக்க வேண்டும். நாசாவின் அறிவிப்பு வின்வெளி ஆய்வில் புதிய மைல் கல்லாக இருக்குமென்பதால் உலகமே இதனை உற்று நோக்கி காத்திருக்கிறது.