Shahid Afridi, Shahid Afridi Death, Nadia Afridi, Shahid Afridi Sixes, Shahid Afridi Daughter, Shahid Afridi Daughter Died, Shahid Afridi Personal Life, Shahid Afridi Wedding, Shahid Afridi News

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷாகித் அஃப்ரிடி அறிவித்துள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முக்கிய வீரர்களில் ஒருவரான ஷாஹித் அஃப்ரிடி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ஆல்ரவுண்டரான அஃப்ரிடி (36), ஏற்கனவே ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஒய்வு பெற்றுவிட்டார். எனினும், டி-டுவண்டி போட்டிகளில் பாகிஸ்தான் அணிக்காக விளையாடி வந்தார்.

கடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை டி-டுவண்டி போட்டிகளில், பாகிஸ்தான் அணியின் கேப்டனாக இருந்தார். உலக கோப்பை தொடர் நிறைவுற்றதும் கேப்டன் பதவியை ராஜினாமா செய்த அஃப்ரிடி, தொடர்ந்து போட்டிகளில் விளையாடி வந்தார்.

இந்நிலையில், சர்வதேச டி-டுவண்டி கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். எனவே, அவரது 21 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்ததுள்ளது. கடந்த 1996-ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிரான போட்டியில் 37 பந்துகளில் இவர் அடித்த அதிவேக சதம், உலக சாதனையாக இருந்தது. இந்த சாதனை 19 ஆண்டுகளுக்கு முறியடிக்கப்படாமலேயே இருந்தது என்பதும், அச்சத்தம் தற்போது வரை பேசப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.