மதுசூதனனுக்கு இரட்டை இலை, மனு 23ந்தேதிக்குள் முடிவு

Election Commission Of India, Election Commission Of India Voters List, Election Commission Of India Identity Card Number Search, Election Commission Of Tamilnadu, Election Commission Of Up, Election Commission Of Maharashtra, Election Commission Result, Election Commission Form 6, Election Commission Of West Bengal, The India Time News, Indiatimnews.Com, Indiatimenews

இரட்டை இலை சின்னம் உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணியினர் நேற்று தலைமை தேர்தல் கமிஷனரை சந்தித்து, மனு அளித்தனர். இதனையடுத்து சசிகலா நியமனம் தொடர்பாக மார்ச் 20 ம் தேதிக்குள் முடிவெடுக்க உள்ளதாக தேர்தல் கமிஷனும் அறிவித்தது.

இதை தொடர்ந்து பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை தலைமையில் 10 பேர் அடங்கிய சசிகலா ஆதரவு அணியினர் இந்திய தலைமை தேர்தல் கமி‌ஷனரை நேற்று சந்தித்து மனு அளித்தனர். அதில் சசிகலா நியமன விவகாரத்தில் அனைத்து விதிகளும் முறையாக பின்பற்றப்பட்டுள்ளன. இடைத்தேர்தல் நடவடிக்கைகள் தொடங்கியுள்ளதால் பன்னீர்செல்வம் அணியினர் வைத்த கோரிக்கைகளை தற்போது பரிசீலனையில் எடுத்துக்கொள்ள கூடாது எனவும் கோரிக்கை வைத்து உள்ளனர்.

இந்த் நிலையில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க ஓபிஎஸ் அணி வலியுறுத்தியுள்ளது. ஓ.பி.எஸ். அணி சார்பில் போட்டியிடும் மதுசூதனனுக்கு வழங்குமாறு தேர்தல் ஆணையத்திடம் மனோஜ் பாண்டியன் இன்று மனு ஒன்றை அளித்துள்ளார்.

இது தொடர்பாக 23-ம் தேதிக்குள் முடிவெடுக்கப்படும் – இந்திய தேர்தல் ஆணையம் தந்தி டிவிக்கு தகவல் தெரிவித்து உள்ளது.