பன்னீர்செல்வம் திடீர் டெல்லி பயணம்

முன்னால் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று இரவு திடீர் டெல்லி பயணம் மேற்கொள்ள இருப்பதாகவும், நாளை மாலை பிரதமர் மோடியை சந்தித்து பேச இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தற்போது இன்று இரவு அவர் திடீரென டெல்லிக்கு செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகின.

OPS, Panneerselvam, Jallikattu, Modi, Tamil nadu news, politicals, indiatimenews
முன்னால் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் பிரதமர் மோடி

நாளை மாலை 4.30 மணியளவில் பிரதமர் மோடியை அவர் சந்திக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஓ.பன்னீர்செல்வம், மசூதனன், மைத்ரேயன் ஆகியோரும் செல்ல இருக்கின்றனர். பிரதமர் உடனான சந்திப்பின் போது தமிழக அரசியல் சூழ்நிலை உள்ளிட்ட முக்கிய பிரச்சனைகள் குறித்து இருவரும் பேசுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

டெல்லி காவல்துறைக்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்

மேலும், தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் சைதியையும் சந்திக்க இருக்கும் ஓ.பன்னீர்செல்வம், கட்சியின் சின்னத்திற்கு உரிமை கோருவதற்கு சான்றாக சில ஆவணங்களை அளிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. இன்று காலமான மத்திய மந்திரி அணில் தாவே இறுதிச்சடங்கிலும் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொள்ள இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.