5 கோடி ரசிகர்கள் பார்த்த பாகுபலி 2 டிரைலர்

Baahubali 2, Baahubali 2 Movie, Baahubali 2 songs, Baahubali 2 trailer, Baahubali 2 movie, Baahubali movie

பிரபாஸ், ராணா டகுபதி, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன் போன்றோர் நடிப்பில் தெலுங்கு, தமிழ், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவான படம் – பாகுபலி. இதனை இயக்கியவர், ராஜமவுலி.

ரூ. 600 கோடி வரை வசூலித்து பல சாதனைகளைச் செய்த பாகுபலியின் 2-ம் பாகமான, ‘பாகுபலி தி கன்க்ளூஷன்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது.

தற்போது இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஏப்ரல் 28 அன்று பாகுபலி 2 வெளிவருகிறது. கோடைக்கால விடுமுறை சமயத்தில் படம் வெளிவருவதால் முதல் பாகத்தை விடவும் அதிகம் வசூலிக்கும் என்கிற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

மார்ச் 16-ம் தேதி மாலை 5 மணிக்கு இணையத்தில் டிரைலர் வெளியிடப்படும் என்று படக்குழு அறிவித்தது. ஆனால், தமிழ் டிரைலர் மட்டும் இணையத்தில் கசிந்தது. இதனை வாட்ஸ் – அப் மற்றும் சமூகவலைத்தளத்தில் அனைவரும் பகிர்ந்து வந்தார்கள்.